எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளியீடு

October 26, 2023

எக்ஸ் சமூக வலைதளத்தில், ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சம் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், பயணங்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் உள்நுழைந்தவுடன், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு காணப்படுகிறது.எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ, தனது எக்ஸ் பதிவில் வீடியோ காலில் இணைந்திருப்பது போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். எக்ஸ் பயனர்கள் தங்களது அட்ரஸ் புக்கில் உள்ள பயனர்கள், மற்றும் தாங்கள் பின்தொடரும் நபர்கள், […]

எக்ஸ் சமூக வலைதளத்தில், ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சம் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், பயணங்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் உள்நுழைந்தவுடன், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு காணப்படுகிறது.எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ, தனது எக்ஸ் பதிவில் வீடியோ காலில் இணைந்திருப்பது போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். எக்ஸ் பயனர்கள் தங்களது அட்ரஸ் புக்கில் உள்ள பயனர்கள், மற்றும் தாங்கள் பின்தொடரும் நபர்கள், மற்றும் சரிபார்க்கப்பட்ட கணக்குகளை கொண்டவர்கள், ஆகியோருக்கு ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம். எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu