எக்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள முன்னாள் ட்விட்டர் தளத்தில், வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், வீடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ள, பொதுமக்கள் தங்கள் கைப்பேசி எண்ணை வழங்க வேண்டிய தேவை இல்லை என கூறியுள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தை, ஒருங்கிணைந்த மற்றும் அனைத்து வகை சமூக வலைதள சேவைகளும் கிடைக்கும் படி, மாற்றி அமைத்து வருவதாக லிண்டா யாக்காரினோ கூறியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.