எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிய ஆண்டு சந்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

October 18, 2023

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஆண்டு சந்தா திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்தாத எக்ஸ் பயனர்கள், இனிமேல் எக்ஸ் தளத்தில் பதிவிட முடியாது. மேலும், அவர்கள் பின்பற்றும் நபர்களின் பதிவுகளுக்கு விருப்பங்கள் இடுவது, பின்னூட்டங்கள் பதிவிடுவது, பதிவுகளை மறு பதிவு செய்வது போன்ற அனைத்து விதமான அடிப்படை செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சந்தா திட்டத்திற்கு ‘நாட் எ பாட்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, இது நிறுவனத்தின் லாப […]

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஆண்டு சந்தா திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்தாத எக்ஸ் பயனர்கள், இனிமேல் எக்ஸ் தளத்தில் பதிவிட முடியாது. மேலும், அவர்கள் பின்பற்றும் நபர்களின் பதிவுகளுக்கு விருப்பங்கள் இடுவது, பின்னூட்டங்கள் பதிவிடுவது, பதிவுகளை மறு பதிவு செய்வது போன்ற அனைத்து விதமான அடிப்படை செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சந்தா திட்டத்திற்கு ‘நாட் எ பாட்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, இது நிறுவனத்தின் லாப நோக்கத்திற்காக அல்லாமல், போலி கணக்குகளை முடக்கும் நோக்கிற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே,சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu