சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே பதில்களை ஏற்கலாம் - எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியீடு

October 10, 2023

எக்ஸ் சமூக வலைதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பதில்கள் சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டும் கிடைக்கும் வண்ணம் மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. ட்விட்டர் சமூக தளத்தை எலான் மஸ்க் கையக படுத்திய பிறகு, அதன் பெயர் எக்ஸ் என மாற்றப்பட்டது. மேலும், அந்த தளத்தில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு பல்வேறு கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தங்கள் […]

எக்ஸ் சமூக வலைதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பதில்கள் சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டும் கிடைக்கும் வண்ணம் மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் சமூக தளத்தை எலான் மஸ்க் கையக படுத்திய பிறகு, அதன் பெயர் எக்ஸ் என மாற்றப்பட்டது. மேலும், அந்த தளத்தில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு பல்வேறு கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தங்கள் எக்ஸ் பதிவுகளுக்கு கிடைக்கும் பதில்கள், யாரிடமிருந்து வரவேண்டும் என்பதையும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே, அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பதில்கள் பெறுவது, தாங்கள் பின்பற்றும் கணக்குகளிடம் இருந்து மட்டும் பதில்கள் பெறுவது, வாடிக்கையாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டும் பதில்கள் பெறுவது, ஆகிய 3 அம்சங்கள் உள்ளன. தற்போது, நான்காவதாக சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டும் பதில்கள் பெரும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu