மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகிறார் ஜி ஜின்பிங்

October 17, 2022

சீனாவின் புதிய அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சீனாவின் அரசியல் அமைப்பின்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் நபரே, நாட்டின் அதிபராகவும் பதவி வகிப்பார். அந்த வகையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, மூன்றாவது முறையாக அவரே சீன அதிபராக பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு தொடங்கியது. அதில், கட்சி […]

சீனாவின் புதிய அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சீனாவின் அரசியல் அமைப்பின்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் நபரே, நாட்டின் அதிபராகவும் பதவி வகிப்பார். அந்த வகையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, மூன்றாவது முறையாக அவரே சீன அதிபராக பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு தொடங்கியது. அதில், கட்சி நிர்வாகிகள் சுமார் 2296 பேர் பங்கேற்றனர். இந்த மாநாடு வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இறுதிக்கட்ட முடிவுகள் 23ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது, கட்சியின் மத்திய குழுவுக்கு 200 உறுப்பினர்களும், ஆட்சிமன்ற குழுவுக்கு 25 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னதாக, இது குறித்து நடத்தப்பட்ட உட்கட்சி கூட்டத்தில், தற்போது கட்சியின் தலைவராக உள்ள ஜி ஜின்பிங்கையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஒரே நபர் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்வது அந்நாட்டில் ஜனநாயக நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் முந்தைய சட்டத்தின்படி, ஒரே நபர் 10 ஆண்டுகள் வரை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். கடந்த 2018 ஆம் ஆண்டு, ஜி ஜின்பிங்கால் இந்த சட்டம் நீக்கப்பட்டது. எனவே, தற்போது, பல சீன மக்கள் இதற்கு எதிராக போராடத் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில், அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றிய போது, ஹாங்காங்கை சீனாவுடன் இணைத்தது போலவே, தைவான் நாட்டை சீனாவுடன் இணைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், அமைதியான முறையில் தைவான் நாட்டை கைப்பற்ற இயலவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இது உலக அரங்கில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தைவான் அதிபரின் நேரடி செய்தி தொடர்பாளர் சாங் டன்-ஹன் பேசுகையில், “ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும் தைவான் நாட்டின் இறையாண்மையை சீனாவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரு நாடு இரு நிர்வாகம் என்ற சீனாவின் நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இரு தரப்பும் ஏற்கும் உடன்பாட்டை எட்ட பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளோம். அதே வேளையில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், சீனாவில் மாநாடு நடைபெற்று வரும் அதே வேளையில், தைவான் நாட்டின் கடற் பகுதியில் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சீனா தைவானை எதிர்க்கும் பட்சத்தில், அமெரிக்கா சீனாவை எதிர்க்க தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே, உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் நேரத்தில், மேலும் ஒரு போர் பதற்ற சூழல் உருவாகி உள்ளது. இது பல தரப்பில் இருந்தும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu