ஷாவ்மி 13 ப்ரோ புதிய கைபேசி இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கைப்பேசியில் நவீன அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. உலக அளவில் 1.13 லட்சம் வரை விற்கப்படும் இந்த கைபேசியின் இந்தியச் சந்தை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இது அமேசான் உள்ளிட்ட இணைய வர்த்தகத் தளங்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி 13 ப்ரோ மாடலில், ஸ்னாப்டிராகன் 8 - 2ம் தலைமுறை ப்ராசசர் உள்ளது. இதன் மூலம், மல்டி டாஸ்கிங், அதிவேக செயல்பாடு, நீடித்த உழைப்பு ஆகியவை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியில், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் புதுப்பிப்பு திறன் 120 Hz ஆக சொல்லப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 4820 mAh ஆக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது MIUI 14 ஆண்ட்ராய்டு 13 வசதியில் இயங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன், அதிநவீன சென்சார்கள் கொண்ட கேமரா, பிரீமியம் லுக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 50 மெகாபிக்சல் டெலி போட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. அத்துடன், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.