சியோமி நிறுவனத்தில் 900 ஊழியர்கள் பணி நீக்கம்

December 21, 2022

சீன கைபேசி உற்பத்தியாளரான சியோமி, 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கைபேசி மற்றும் இணைய சேவை வர்த்தகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, 15% சியோமி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை மூலம், சர்வதேச அளவில் 10% பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு, அந்தந்த நாட்டின் விதிமுறைகளின் படி உரிய தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பொது முடக்கம் […]

சீன கைபேசி உற்பத்தியாளரான சியோமி, 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கைபேசி மற்றும் இணைய சேவை வர்த்தகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, 15% சியோமி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை மூலம், சர்வதேச அளவில் 10% பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு, அந்தந்த நாட்டின் விதிமுறைகளின் படி உரிய தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள பொது முடக்கம் காரணமாக, சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 9.7% சரிந்தது. விற்பனை மதிப்பு, வருடாந்திர அளவில் 20% சரிந்து, 10.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவானது. இந்த நிறுவனத்தின் வருவாயில் 60% கைபேசி விற்பனை மூலம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில், கைப்பேசி விற்பனையிலும் 11% சரிவு பதிவாகியுள்ளது. இதன் மூலம், பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் சியோமி இணைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu