இந்தியாவின் முன்னணி கைபேசி நிறுவனமாக சாம்சங் நிறுவனம் இருந்து வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக, சீன கைபேசி நிறுவனமான ஷாவ்மி அந்த இடத்தை கைப்பற்றி இருந்தது. தற்போது, தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மீண்டும் மாறியுள்ளது.
இந்திய கைப்பேசி சந்தையில் 21% பங்குகளுடன் 6.17 மில்லியன் கைபேசிகளை சாம்சங் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், இந்திய கைபேசி சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 6.4 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்த விவோ நிறுவனம் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை ஷாவ்மி நிறுவனமும், நான்காம் இடத்தை ஒப்போ நிறுவனமும், ஐந்தாம் இடத்தை ரியல்மி நிறுவனமும் பிடித்துள்ளன. பண்டிகை காலங்களில் ஆன்லைன் விற்பனையோடு இணைந்து, கடைகளின் மூலம் விற்பனை செய்வதிலும் சாம்சங் நிறுவனம் கவனம் செலுத்தியதன் மூலம், மீண்டும் முதலிடத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.














