இந்தியாவில் தனது கைபேசி விற்பனையை உயர்த்த ஷாவ்மி நிறுவனம் புதிய திட்டம் ஒன்றில் களமிறங்கியுள்ளது. அதன்படி, ‘ஷாவ்மி ஈசி பைனான்ஸ்’ என்ற திட்டம் மூலம் டிஜிட்டல் லோன் வழங்கப்படுகிறது.
ஷாவ்மி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் முரளி கிருஷ்ணன் இது குறித்து பேசியதாவது: “இந்திய மக்கள், எந்த தடையும் இன்றி தங்களுக்கு ஏற்ற விலைகளில் கைபேசிகளை வாங்க நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதன்படி, அதற்கான கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதனால், இந்தியாவில் கைபேசி வாங்குவது அனைவருக்கும் சாத்தியப்படும் கனவாக மாறும்.” என்று கூறியுள்ளார். கைபேசிகள் வாங்குவதற்கான டிஜிட்டல் லோன் திட்டம் ரெட்மி 12 மாடலில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆக்சியோ என்ற நிறுவனத்துடன் ஷாவ்மி கூட்டணியில் இணைந்துள்ளது.