5ஜி சேவைகளுக்காக ஜியோ நிறுவனத்துடன் இணைந்து சியோமி இந்தியா ஒப்பந்தம்

December 28, 2022

சீன கைபேசி நிறுவனமான சியோமி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனத்தின் தடையற்ற 5ஜி சேவையை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள், தங்கள் கைபேசியில், 'நெட்வொர்க் டைப்' ஐ, 5ஜி என்று தேர்ந்தெடுத்தால் போதுமானது. ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5ஜி சேவையை தடையில்லாமல் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வீடியோ அழைப்புகள், இணைய வீடியோக்கள் பார்ப்பது, ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுவது போன்றவை […]

சீன கைபேசி நிறுவனமான சியோமி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனத்தின் தடையற்ற 5ஜி சேவையை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள், தங்கள் கைபேசியில், 'நெட்வொர்க் டைப்' ஐ, 5ஜி என்று தேர்ந்தெடுத்தால் போதுமானது. ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5ஜி சேவையை தடையில்லாமல் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், வீடியோ அழைப்புகள், இணைய வீடியோக்கள் பார்ப்பது, ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுவது போன்றவை தடையற்ற முறையில், அதிக இணைய வேகத்துடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சியோமி 11 அல்ட்ரா 5ஜி, 12 ப்ரோ 5ஜி, 11டி ப்ரோ 5 ஜி, நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி உள்ளிட்ட பல புதிய மாடல் கைபேசிகளில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படுவதாக சியோமி இந்தியாவின் தலைவர் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் சுனில் தத் உறுதி செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu