இந்தியாவின் முன்னணி கைபேசி நிறுவனமாக சீனாவின் ஷாவ்மி உள்ளது. இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவில், தற்போது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையை 1000 த்துக்கு கீழ் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையாகவும், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாகவும் இந்த பணி நீக்கம் பார்க்கப்படுகிறது.
சீன நிறுவனங்களுக்கு இந்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில், ஷாவ்மி நிறுவனமும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது. அத்துடன், இந்தியாவில் ஷாவ்மி கைபேசிகள் விற்பனை, முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு குறைந்துள்ளது. எனவே, இந்த பணி நீக்கம் மிகவும் தவிர்க்க முடியாததாக அமைகிறது என்று நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.