இந்தியச் சந்தையில் ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மி 12 சீரிஸ் கைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி, நோட் 12 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஆகிய கைபேசிகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முறையே 17999, 24999 மற்றும் 29999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஷாவ்மி ரெட்மி 12 கைபேசிகளில், பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நோட் 12 ப்ரோ ப்ளஸ் 5ஜி கைபேசியில் 200 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைபேசிகள் அனைத்துமே மிகவும் ஒல்லியான வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கைப்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அனூஜ் சர்மா வெளியிட்டுள்ளார். பொதுவாகவே, இந்த கைபேசி மாடல்கள் அனைத்திலும், அதிக திறன் கொண்ட பேட்டரி அம்சம், சிறப்பான டிஸ்ப்ளே, வேகமாக சார்ஜ் ஆகும் திறன், சிறந்த கேமரா தரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.