சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஷாவ்மி ஆகும். இந்த நிறுவனம், தனது முதல் மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று தனது முதல் மின்சார வாகனத்தை ஷாவ்மி வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளதாக ஷாவ்மி நிறுவனத்தின் தலைமை செயலாளர் லி ஜூன் தெரிவித்துள்ளார். ஷாவ்மி நிறுவனத்தின் மின்சார வாகனம், செல் டு பாடி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குறைவான உயரத்தில், விஸ்தாரமான இட வசதியுடன், உறுதியான வகையில் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த வாகனத்தின் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பீஜிங் ஆலையில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.