சியோமியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய பிறகு அந்நிறுவனம் வணிகத்தை பாதுகாக்கிறது.

October 3, 2022

சியோமி நிறுவனத்தின் 55.51 பில்லியன் டாலர் சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இதில் 84% அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் குழுமத்திற்கு செலுத்தப்பட்ட ராயல்டி பணம் என்று தற்போது சியோமி தெரிவித்துள்ளது. செல்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தனது அறிக்கையில் ௯றியதாவது, தனது 682 மில்லியன் டாலர் சொத்துக்களை முடக்கிய இந்திய அரசின் உத்தரவு நிறுவனத்திற்கு ஏமாற்றம் அளித்ததாகவும், நிறுவனம் அதன் நலன்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்று கூறியது. Qualcomm உடனான இந்த ஒப்பந்தம் Xiaomi இந்தியாவிற்கு ராயல்டியை […]

சியோமி நிறுவனத்தின் 55.51 பில்லியன் டாலர் சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இதில் 84% அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் குழுமத்திற்கு செலுத்தப்பட்ட ராயல்டி பணம் என்று தற்போது சியோமி தெரிவித்துள்ளது.

செல்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தனது அறிக்கையில் ௯றியதாவது, தனது 682 மில்லியன் டாலர் சொத்துக்களை முடக்கிய இந்திய அரசின் உத்தரவு நிறுவனத்திற்கு ஏமாற்றம் அளித்ததாகவும், நிறுவனம் அதன் நலன்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்று கூறியது. Qualcomm உடனான இந்த ஒப்பந்தம் Xiaomi இந்தியாவிற்கு ராயல்டியை செலுத்துவதற்கான ஒரு வணிக ஏற்பாடு என்று நிறுவனம் ௯றியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த அமலாக்கத்துறை, சியோமி நிறுவனம் சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அண்மையில் பெரும் தொகையை அனுப்பியது. மீதம் உள்ள பணத்தை வர்த்தகத்துக்காக எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் வைத்து இருந்தது. இந்நிலையில் அதிலிருந்து கூடுதல் தொகையை ராயல்டி என்ற பெயரில் சியோமியுடன் சட்டபூர்வமாக ஒப்பந்தம் வைத்துள்ள Qualcomm நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. அதாவது சட்டவிரோதமாக சியோமி நிறுவனம் இந்த பணப்பரிமாற்றத்தைச் செய்துள்ளது. எனவே Xiaomi வெளிநாட்டு நாணயங்களை ராயல்டி செலுத்தும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து Xiaomi ன் சொத்துக்களை முடக்க இந்திய மேல்முறையீட்டு ஆணையம் உத்த்ரவிட்டது. பின்னர் அமலாக்கத்துறையானது 55.51 பில்லியன் ரூபாயை பறிமுதல் செய்தாக ௯றியது.
இதற்கிடையில் 18% பங்குகளுடன், Xiaomi மற்றும் Samsung ஆகியவை கூட்டாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையை வழிநடத்துகின்றன. இது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரியது செல்போன் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu