வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு வந்த நிலையில் யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது.
கடந்த ஒரு வாரங்களுக்கும் மேலாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தற்போது யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது. இது இரவில் 205.45 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது. மேலும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் உட்பட்ட சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைச் விடுத்துள்ளது.