யமுனை நதி தனது அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, டெல்லி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக கன மழை பதிவாகி வருகிறது. ஆனால், டெல்லியில் அதிக மழை இல்லை. எனினும், யமுனா நதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் 2023ல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இன்று மதியம் 1 மணி அளவில், யமுனை நதியின் உச்சபட்ச நீர்மட்ட அளவான 207.49 மீட்டர் அளவைத் தாண்டி, தண்ணீர் அளவு பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், 1978 ஆம் ஆண்டு இதே அளவில் யமுனை நதி நீர் மட்டம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதி 207.72 மீட்டர் நீர் அளவை இன்று இரவு எட்டும் என்று கணிப்பதாக கூறியுள்ளார். மேலும், பேரிழப்பை தவிர்க்க மத்திய அரசின் உதவியை கோரியுள்ளார்