யானை கவுனி மேம்பாலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறப்பு

March 16, 2024

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம் 57 வது வார்டில் அமைந்துள்ள யானை கவுனி மேம்பாலம் ஆனது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 57வது வார்டில் யானைக்கால் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வால் டாக்ஸ் சாலையையும் ராஜா முத்தையா சாலையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பலமாகும். இது மிகவும் பழுதடைந்ததாலும், பழமையானதாக இருந்ததாலும் இதனை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வால் டாக்ஸ் சாலையின் […]

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம் 57 வது வார்டில் அமைந்துள்ள யானை கவுனி மேம்பாலம் ஆனது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 57வது வார்டில் யானைக்கால் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வால் டாக்ஸ் சாலையையும் ராஜா முத்தையா சாலையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பலமாகும். இது மிகவும் பழுதடைந்ததாலும், பழமையானதாக இருந்ததாலும் இதனை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வால் டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீட்டர் மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.9 மீட்டர் நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜா முத்தையா சாலை சென்றடையும் வகையில் ஒரு வழி பாதை முடிக்கப்பட்டு இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu