கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சுப் பிரதேசமான மயோட்டியை சிடோ என்ற பயங்கர சூறாவளி சனிக்கிழமை தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய புயல் காற்று, வீடுகளை தரைமட்டமாக்கியதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தையும் முழுமையாக துண்டித்துள்ளது. உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பலர் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சூறாவளியின் தாக்கத்தால் மூடப்பட்டுள்ள விமான […]

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சுப் பிரதேசமான மயோட்டியை சிடோ என்ற பயங்கர சூறாவளி சனிக்கிழமை தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய புயல் காற்று, வீடுகளை தரைமட்டமாக்கியதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தையும் முழுமையாக துண்டித்துள்ளது. உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பலர் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சூறாவளியின் தாக்கத்தால் மூடப்பட்டுள்ள விமான நிலையத்தை வியாழக்கிழமை வரை திறக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

சுமார் 3,20,000 மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்காவின் மயோட்டி நகரம், பிரான்ஸ் கீழ் உள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட சிடோ சூறாவளி, கடந்த 90 ஆண்டுகளில் பதிவான சக்தி வாய்ந்த புயலாகும். எனவே, பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக 400 ஜென்டர்ம்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் படையினரை மயோட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளித்துள்ளார். மேலும், விரைவில் மயோட்டிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu