கேரளாவில் கனமழை தீவிரம் அடைந்து வருவதால் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நிரம்பியுள்ளது. இந்த மழை இன்று இரவு 9 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை இரவு வரை மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.