கேரளாவில்  9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், […]

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu