இன்று சென்னையில் மஞ்சள் அலர்ட்

November 15, 2023

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை […]

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu