ஏமன் பிரதமர் அப்துல்மாலிக் சயீத் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவு துறை மந்திரியாக இருந்த அகமது முபாரக் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏமன் நாட்டின் அப்துல் மாலிக் சையத் ஆவார். இவர் கடந்த 2018 இல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் ஆட்சி குழுவால் நீக்கப்பட்டுள்ளார். அதோடு அவருக்கு பதிலாக வெளியுறவு துறை மந்திரியாக இருந்த அகமது முபாரக் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அக்குழு குறிப்பிடவில்லை. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளியர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏமன் உள்நாட்டு பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது.