கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் நாட்டில் புதிய கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 3டி ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கள்ள நோட்டு புழக்கத்துக்கு எதிரான ஜப்பான் நாட்டின் புதிய கரன்சிகளைப் பற்றி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜப்பானிய யென் மதிப்பில் 10000, 5000 மற்றும் 1000 மதிப்பிலான நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 10000 யென் நோட்டில் Eiichi Shibusawa புகைப்படமும், 5000 யென் நோட்டில் Umeko Tsuda புகைப்படமும், 1000 யென் நோட்டில் Shibasaburo Kitasato புகைப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுப் புழக்கம் ஒழிக்கப்படுவதால் ஜப்பான் பொருளாதாரம் உயர்வடையும் என கருதப்படுகிறது.