எஸ் வங்கியில் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் பகுதியாகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாகவும், இந்த பணி நீக்கம் அமைந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சிலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்கித் துறையை பொருத்தவரை, பல்வேறு வங்கிகள் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வரும் சூழலில், எஸ் வங்கி பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு, எஸ் வங்கியில் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, எஸ் வங்கியில் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.