எஸ் வங்கியின் நிகர லாபம் 81% சரிவு

January 23, 2023

எஸ் வங்கி தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 81% சரிந்து 51.52 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 11.7% உயர்ந்து, 1971 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிகர முன்பணம் 10.4% உயர்ந்து, 194573 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், வங்கியில் மொத்தமாக உள்ள வைப்புத் தொகை மதிப்பு 15.9% உயர்ந்து, 213608 கோடியாக பதிவாகி உள்ளது. எஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, […]

எஸ் வங்கி தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 81% சரிந்து 51.52 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 11.7% உயர்ந்து, 1971 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிகர முன்பணம் 10.4% உயர்ந்து, 194573 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், வங்கியில் மொத்தமாக உள்ள வைப்புத் தொகை மதிப்பு 15.9% உயர்ந்து, 213608 கோடியாக பதிவாகி உள்ளது.

எஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வங்கியின் மொத்த மற்றும் நிகர செயல்படாத சொத்துக்கள் விகிதம் 2 மற்றும் 1 சதவீதங்களாக குறைந்துள்ளன. மேலும், வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் விகிதம் 29.9% ஆக பதிவாகியுள்ளது. எஸ் வங்கியின் மொத்த சொத்துக்கள் 13% உயர்ந்து, 343798 கோடியாகவும், வட்டி அல்லாத இதர வருவாய் 56% உயர்ந்து, 1143 கோடியாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், சில்லறை விற்பனை மூலம் அதிகபட்ச வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu