வியாழன் கோளின் யூரோப்பா நிலவுக்கு பெயர்களை அனுப்பலாம் - நாசா அழைப்பு

November 17, 2023

வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவு யூரோப்பா. இது பூமியைப் போலவே கடல்களால் சூழப்பட்ட பகுதியாகும். இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, வரும் 2024 அக்டோபரில் விண்கலம் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் பொருத்தப்படும் மைக்ரோ சிப்பில், பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவிடலாம் என நாசா அழைப்பு விடுத்துள்ளது. பொதுவாக, நாசாவின் ஒவ்வொரு விண்வெளி திட்டங்களிலும், அதன் விண்கல பகுதிகளில், மேன்மையான கருத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், வியாழன் கோளின் யூரோப்பா நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் […]

வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவு யூரோப்பா. இது பூமியைப் போலவே கடல்களால் சூழப்பட்ட பகுதியாகும். இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, வரும் 2024 அக்டோபரில் விண்கலம் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் பொருத்தப்படும் மைக்ரோ சிப்பில், பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவிடலாம் என நாசா அழைப்பு விடுத்துள்ளது.
பொதுவாக, நாசாவின் ஒவ்வொரு விண்வெளி திட்டங்களிலும், அதன் விண்கல பகுதிகளில், மேன்மையான கருத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், வியாழன் கோளின் யூரோப்பா நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் யூரோப்பா கிளிப்பர் விண்கலத்தில், அமெரிக்க கவிஞர் அடா லிமான் எழுதிய ‘மாயத்தை போற்றி’ (In Praise of Mystery) என்ற கவிதை இடம்பெறுகிறது. கவிதையைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனுப்பும் விவரங்கள் பொறிக்கப்பட உள்ளன. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கும் நாசா, இந்த பட்டியல் முடிவடைந்ததும், நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தில் இவற்றை பொறிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu