தமிழகத்தில், கடந்த 2 நாட்களில் 4 இளம் மருத்துவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில், கடந்த 2 நாட்களில் மட்டும் 4 இளம் மருத்துவர்கள் பணியிடங்களில் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பணிச் சூழல் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே வேளையில், அரசு மருத்துவர்கள் தரப்பில், மருத்துவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலருக்கு […]

தமிழகத்தில், கடந்த 2 நாட்களில் மட்டும் 4 இளம் மருத்துவர்கள் பணியிடங்களில் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பணிச் சூழல் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே வேளையில், அரசு மருத்துவர்கள் தரப்பில், மருத்துவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலருக்கு இதய துடிப்பின் அளவு 150 க்கு மேல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். நிர்வாகம் கொடுக்கும் நிர்பந்தம் அல்லது பணம், பெயர், புகழ் அடைவதற்கான முயற்சி ஆகியவற்றால் மருத்துவர்களுக்கு இவ்வாறு நேருவதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் தனுஷ் (24), தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியர் விஜய் சுரேஷ் கண்ணா (38), திருச்சி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ்குமார் (46), சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் கௌரவ் காந்தி(41) ஆகியோர், மிகவும் இள வயதிலேயே, இதய செயலிழப்பு மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரங்களில் நடந்த இந்த நிகழ்வுகளால் மருத்துவத் துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu