டெல்லியில் இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம்

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 100க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்துவரும் தற்காலிக குழுவை கலைத்துவிட்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என டெல்லியில் 100க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரி சாக்ஷி […]

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 100க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்துவரும் தற்காலிக குழுவை கலைத்துவிட்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என டெல்லியில் 100க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரி சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர் மைதானத்தில் முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சமூக அலுவலகர், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டு தற்காலிக குழுவை நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் கடந்த 2023 ஜனவரியில் இருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் ஓராண்டு வீணாக்கி விட்டனர் என்று இவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த இந்த மூன்று வீரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu