ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் தனிப்பட்ட யூடியூப் சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது. டிசம்பர் முதல் அமலாகும் இந்த விதி, குழந்தைகளை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்களில் ஏற்கனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை சந்தித்த குழந்தைகளில் 37% பேர் அதை யூடியூப்பில் பார்த்ததாக தெரியவந்தது. சைபர் புல்லிங், ஆபாச உள்ளடக்கம், அதிக திரை நேரம் போன்றவை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்தானவை என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் யூடியூப் காணலாம், ஆனால் தனி சேனல் உருவாக்க அனுமதி இல்லை. இந்த முடிவை பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆதரித்துள்ளனர்.