யூடியூப் தளம் முடக்கம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

April 11, 2023

ஏப்ரல் 11ம் தேதியான இன்று, உலக அளவில் பல்வேறு தளங்கள் முடங்கியுள்ளன. ஆப்பிள் மியூசிக் மற்றும் இதர ஆப்பிள் சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியான நிலையில், யூடியூப் தளம் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக புகார்களை தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில், இந்த பிரச்சனை உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ளதும், குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படவில்லை என்பதும், தெரியவந்துள்ளது. இந்த தளங்கள் முடங்கியதற்கான காரணம் தெரியவில்லை. ‘டவுன் டிடெக்டர்’ எனப்படும் ஆன்லைன் தளம் வலைத்தளங்கள் […]

ஏப்ரல் 11ம் தேதியான இன்று, உலக அளவில் பல்வேறு தளங்கள் முடங்கியுள்ளன. ஆப்பிள் மியூசிக் மற்றும் இதர ஆப்பிள் சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியான நிலையில், யூடியூப் தளம் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக புகார்களை தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில், இந்த பிரச்சனை உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ளதும், குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படவில்லை என்பதும், தெரியவந்துள்ளது. இந்த தளங்கள் முடங்கியதற்கான காரணம் தெரியவில்லை.

‘டவுன் டிடெக்டர்’ எனப்படும் ஆன்லைன் தளம் வலைத்தளங்கள் முடங்கும் செய்திகளை வெளியிடுகிறது. அதன்படி, 65% மக்கள் யூடியூப் வீடியோக்களை பார்க்க முடியவில்லை என புகார் அளித்துள்ளனர். 25% மக்கள் யூடியூப் செயலியை இயக்க முடியவில்லை எனவும், 10% மக்கள் கணினியில் யூடியூப் தளத்தை இயக்க முடியவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர். அதே வேளையில், ட்விட்டரில் இது தொடர்பான நகைச்சுவை செய்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu