ஜாம்பியாவில் காலரா - 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா

February 6, 2024

காலரா நோயால் பாதிக்கப்பட்ட ஜாம்பியாவிற்கு சரக்கு விமானம் மூலம் இந்தியா 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது. ஜாம்பியாவில் திடீரென காலரா நோய் பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியா மனிதாபிமான உதவி செய்து வருகிறது. அந்த வகையில் சுமார் 3.5 டன் மருந்து பொருட்களை இந்தியா சரக்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து இந்தியா தரப்பில் கூறப்படுவதாவது, காலரா நோயால் பாதிக்கப்பட்ட ஜாம்பியாவிற்கு சரக்கு விமானம் மூலம் […]

காலரா நோயால் பாதிக்கப்பட்ட ஜாம்பியாவிற்கு சரக்கு விமானம் மூலம் இந்தியா 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது.

ஜாம்பியாவில் திடீரென காலரா நோய் பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியா மனிதாபிமான உதவி செய்து வருகிறது. அந்த வகையில் சுமார் 3.5 டன் மருந்து பொருட்களை இந்தியா சரக்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து இந்தியா தரப்பில் கூறப்படுவதாவது, காலரா நோயால் பாதிக்கப்பட்ட ஜாம்பியாவிற்கு சரக்கு விமானம் மூலம் இந்தியா 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது. இதில் குளோரின் மாத்திரைகள், குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட மருந்துகள் அடங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 15,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 600 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நாட்டில் உள்ள 10 மாகாணங்களில் ஒன்பதில் காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu