ஜீ நிறுவனம், அண்மையில் சோனி நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையின் போது பெறப்பட்ட கடன் தொகையை தற்போது திருப்பிச் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இண்டஸ் இண்ட் வங்கிக்கு 10 பில்லியன் டாலர்கள் செலுத்தப்பட உள்ளது. மேலும், வரும் வெள்ளிக்கிழமைக்குள், கிட்டத்தட்ட 837 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கியின் திவால் நிலை தவிர்க்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்புக்கு, நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு சிசிஐ ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. எனவே, தற்போதைய நிலையில், இறுதியாக, என் சி எல் டி ஒப்புதல் வழங்கியவுடன் நிறுவனங்கள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.