ஜீ மற்றும் சோனி நிறுவனங்கள் இணைப்புக்கு என் சி எல் டி ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியான பின்னர், இன்றைய தினம், ஜீ நிறுவனத்தின் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அதிகமானோர் ஜீ பங்குகளை வாங்க முனைந்தனர்.
கடந்த 2021 ல், ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, அது சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த இணைப்பின் முக்கிய அங்கமான தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.