உக்ரேனிய கருங்கடலில் ராணுவம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்கள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றன. உக்ரைன் ரஷ்ய போர் கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி கடல் சார்ந்த வர்த்தக பாதைகளை பாதுகாத்துள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் ராணுவம் கருங்கடல் பகுதியில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அங்கு ரஷ்ய போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் கடல் சார்ந்த வர்த்தக பாதைகளை உக்ரைன் பாதுகாத்துள்ளது. உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. முன்னதாக நாம் என்ன ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இப்பொழுது வர்த்தக பாதைகளை உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதோடு உக்கரைனின் ராணுவ தலைமை 5 லட்சம் மக்களை அணி திரட்ட முயற்சி செய்து வருகிறது. இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் உக்ரைன் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி என்றார்.














