உக்ரைன் ரஷ்யா போருக்கு ஜெலன்ஸ்கி தான் காரணம் - டிரம்ப்

February 20, 2025

உக்ரைன்-ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யாவுடன் சமாதானம் பேச தவறியதே போரின் காரணம் எனவும், அவர் ஒரு நல்ல பேச்சுவார்த்தையாளர் அல்ல எனவும் கூறினார். ரஷ்ய அதிபர் புடினை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும், இது போரை முடிக்க ஒரு நல்ல வாய்ப்பு எனவும் தெரிவித்தார். இந்த கருத்துகள், அமெரிக்கா-ரஷ்யா ரகசிய பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியாகியது. டிரம்பின் கருத்துகள் ஐரோப்பிய தலைவர்களை அதிர்ச்சியில் […]

உக்ரைன்-ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யாவுடன் சமாதானம் பேச தவறியதே போரின் காரணம் எனவும், அவர் ஒரு நல்ல பேச்சுவார்த்தையாளர் அல்ல எனவும் கூறினார். ரஷ்ய அதிபர் புடினை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும், இது போரை முடிக்க ஒரு நல்ல வாய்ப்பு எனவும் தெரிவித்தார். இந்த கருத்துகள், அமெரிக்கா-ரஷ்யா ரகசிய பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியாகியது.

டிரம்பின் கருத்துகள் ஐரோப்பிய தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் உக்ரைனுக்கு அமைதிப்படைகளை அனுப்ப ஆய்வு செய்யும் நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதை நிராகரித்துள்ளன. உக்ரைன் அரசியலில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu