பிளாட்பார்ம் கட்டணம் அறிவித்த துரித வர்த்தக நிறுவனம் ஜெப்டோ

March 13, 2024

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, பிளாட்பார்ம் கட்டணத்தை அறிவித்துள்ளது. ஆர்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக வசூல் செய்யப்படும்.மேலும், இது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயத்தில், துரித வர்த்தக துறையை பொருத்தவரை, ஜெப்டோ நிறுவனத்துக்கு போட்டியாக இருக்கும் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற தளங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை. ஜெப்டோ நிறுவனம், பிளாட்பார்ம் கட்டணம் தவிர இதர பல கட்டணங்களையும் விதிக்கிறது. இரவு நேர ஆர்டருக்கு கூடுதலாக 15 ரூபாய், […]

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, பிளாட்பார்ம் கட்டணத்தை அறிவித்துள்ளது. ஆர்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக வசூல் செய்யப்படும்.மேலும், இது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயத்தில், துரித வர்த்தக துறையை பொருத்தவரை, ஜெப்டோ நிறுவனத்துக்கு போட்டியாக இருக்கும் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற தளங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை.

ஜெப்டோ நிறுவனம், பிளாட்பார்ம் கட்டணம் தவிர இதர பல கட்டணங்களையும் விதிக்கிறது. இரவு நேர ஆர்டருக்கு கூடுதலாக 15 ரூபாய், 199 ரூபாய்க்கு குறைவான ஆர்டருக்கு டெலிவரி கட்டணம், சேவை கட்டணமாக 5 ரூபாய் ஆகியவை வசூலிக்கப்படுகின்றன. இந்த நிலையில், பிளாட்பார்ம் கட்டணம் கூடுதலாக விதிக்கப்படுவது குறித்து பேசிய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “டெலிவரி கட்டணத்தை மட்டுமே நம்பி நிறுவனத்தின் லாபத்தை தீர்மானிக்க முடியவில்லை. எனவே, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிளாட்பார்ம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெப்டோ பாஸ் என்ற சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சந்தா திட்டத்தில் இணைபவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu