10 நிமிடத்தில் உணவு டெலிவரி - புதிய செயலி தொடங்கும் ஜெப்டோ

December 11, 2024

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது 10 நிமிட உணவு டெலிவரி சேவையான ஜெப்டோ கேஃபேவுக்காக தனிப்பட்ட ஒரு மொபைல் செயலியை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித் பலிச்சா இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஜெப்டோ கேஃபே தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தினமும் 30,000 ஆர்டர்கள் கிடைக்கின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 100க்கும் மேற்பட்ட புதிய கஃபேக்கள் தொடங்கப்படுகின்றன. இந்த வளர்ச்சியை தொடர்ந்து, அடுத்த நிதியாண்டில் ரூ.1,000 […]

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது 10 நிமிட உணவு டெலிவரி சேவையான ஜெப்டோ கேஃபேவுக்காக தனிப்பட்ட ஒரு மொபைல் செயலியை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித் பலிச்சா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெப்டோ கேஃபே தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தினமும் 30,000 ஆர்டர்கள் கிடைக்கின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 100க்கும் மேற்பட்ட புதிய கஃபேக்கள் தொடங்கப்படுகின்றன. இந்த வளர்ச்சியை தொடர்ந்து, அடுத்த நிதியாண்டில் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டும் இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், ஜெப்டோ நிறுவனம் சமீபத்தில் ரூ.350 கோடி நிதியை திரட்டியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, ஜெப்டோ கேஃபே சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu