பங்குச்சந்தை முகமை நிறுவனமான ஜெரோதாவின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 87% உயர்ந்து, 2094.3 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 4963.7 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல்கள் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022-ம் நிதி ஆண்டில், வருவாயுடன் சேர்ந்து ஜெரோதாவின் செலவுகளும் அதிகரித்து வந்துள்ளன. ஜெரோதாவின் செலவுகள் 72% உயர்ந்து, 2164 கோடியாக கடந்த நிதி ஆண்டில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜெரோதா நிறுவனத்தின் தோற்றுனர் நித்தின் காமத், “வருடாந்திர அடிப்படையில் சுமார் 60% வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது. சரிபார்க்கப்படாத கணக்குகள் அடிப்படையில் சுமார் 1800 கோடி மற்றும் 4300 கோடி அளவுகளில் கடந்த நிதி ஆண்டு லாபம் மற்றும் வருவாய் பதிவாகியுள்ளது” என்று கூறியுள்ளார். அத்துடன், நிறுவனம் தொடர்ந்து தனது இலக்குகளை நோக்கிய பயணத்தில் முறையாக ஈடுபட்டுள்ளதாக கூறினார்.