பெங்களூருவை தலைமையாகக் கொண்டு ஜீஸ்ட்மனி என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள் ஜீஸ்ட்மனி நிறுவனத்தை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில், ஜீஸ்ட்மனி நிறுவனத்தை போன் பே நிறுவனம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், 300 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் தோல்வியுற்றதால், தற்போது ஜீஸ்ட்மனி நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஜீஸ்ட்மனி நிறுவனத்தின் 20% ஊழியர்களை நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, மொத்தம் 450 பேர் பணி செய்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 100 பேர் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.














