கண்ணூரில் ஜிகா வைரஸ் பரவல்

கண்ணூரில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் டெங்கு, எலி காய்ச்சல் போன்றவை பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அங்கு ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எட்டு பேருக்கு காய்ச்சல்,தலைவலி, கண்வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் இருந்தது. இதனை அடுத்து அங்கு நீதிமன்றங்கள் மூடப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் நோய் […]

கண்ணூரில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் டெங்கு, எலி காய்ச்சல் போன்றவை பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அங்கு ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எட்டு பேருக்கு காய்ச்சல்,தலைவலி, கண்வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் இருந்தது. இதனை அடுத்து அங்கு நீதிமன்றங்கள் மூடப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் நோய் பாதிப்பு இருந்த 23 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் எட்டு பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுவினால் உண்டாக கூடியது. இதனை தடுக்க சுகாதார பணியாளர்கள் தீவிர ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu