இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட ஜோகோ நிறுவனம் விண்ணப்பம்

June 7, 2024

பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோகோ, இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடுவதற்காக விண்ணப்பித்துள்ளது. கூட்டு முயற்சியாக செமி கண்டக்டர் உற்பத்தியில் களமிறங்குவதற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக ஜோகோ இணை தோற்றுனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத் தரப்பில் இருந்து, பல்வேறு மதிப்பீடுகள், ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்த பிறகு, இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். ஜோகோ நிறுவனம் கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையைத் […]

பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோகோ, இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடுவதற்காக விண்ணப்பித்துள்ளது. கூட்டு முயற்சியாக செமி கண்டக்டர் உற்பத்தியில் களமிறங்குவதற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக ஜோகோ இணை தோற்றுனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத் தரப்பில் இருந்து, பல்வேறு மதிப்பீடுகள், ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்த பிறகு, இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

ஜோகோ நிறுவனம் கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu