குறிப்பிட்ட சில பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் வகையில், சிறிய வகை ஏஐ மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சிஎன்பிசி நிறுவனத்துடன் நேர்காணல் ஒன்றில் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றார். அப்போது, சாட் ஜிபிடி அடிப்படையில் இயங்கும் 13 ஜெனரேடிவ் ஏஐ தொழில்நுட்பங்களை ஜோகோ நிறுவனம் வெளியிட்டுள்ளதாக கூறினார். மேலும், ஜோகோ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கருவியான ‘ஜியா’வில், மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் இணைக்கப்படுவதாக கூறினார். அத்துடன், குறிப்பிட்ட சில பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் வகையில் சிறிய வகை செயற்கை நுண்ணறிவு மாடலை, ஜோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவினர் உருவாக்கி வருவதாக கூறினார்.














