இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோகோ கார்ப்பரேஷன், கடந்த 2022-ம் நிதியாண்டில், 43% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தில் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த லாபம் 2748.83 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 29% உயர்ந்து, 6998.82 கோடியாக பதிவாகியுள்ளது. ஜோகோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு இணை நிறுவனங்களின் வருவாயை இணைத்து, மேற்குறிப்பிட்ட வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், ஜோகோ நிறுவனத்தின் லாபம் 2386 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வருவாய் 5309.5 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், தனிப்பட்ட முறையில், ஜோகோ நிறுவனம் 21% லாபம் மற்றும் 19% வருவாய் உயர்வை பதிவு செய்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, கடந்த நவம்பர் மாதத்தில் ஜோகோ நிறுவனம் 1 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்டியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.