ஜொமாட்டோ பெயர் மாற்றம்

February 7, 2025

உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "எடர்னல்" என மாற்றியுள்ளது. நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடர்னல் நிறுவனம், சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக், ஹைபர்பியூர் போன்ற சேவைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனமாக செயல்படும். பங்குதாரர்களுக்காக வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், “இது நிறுவனப் பெயர் மற்றும் செயலி பயன்பாட்டிற்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தும். பிளிங்கிட் உடன் இணைந்துள்ளதனால், நாம் ஜொமாட்டோவை இனி ‘எடர்னல்’ என அழைக்க விரும்புகிறோம். […]

உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "எடர்னல்" என மாற்றியுள்ளது. நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடர்னல் நிறுவனம், சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக், ஹைபர்பியூர் போன்ற சேவைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனமாக செயல்படும். பங்குதாரர்களுக்காக வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், “இது நிறுவனப் பெயர் மற்றும் செயலி பயன்பாட்டிற்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தும். பிளிங்கிட் உடன் இணைந்துள்ளதனால், நாம் ஜொமாட்டோவை இனி ‘எடர்னல்’ என அழைக்க விரும்புகிறோம். ஆனால், செயலி பெயர் மாற்றமில்லை” என தெரிவித்தார்.

ஜொமாட்டோ பெயர் மாற்றம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியான நிலையில், அதனை நிராகரித்திருந்த தீபிந்தர் கோயல், தற்போது அந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இனி பங்குச் சந்தையில் எடர்னல் என்ற பெயரில் பங்குகள் பரிமாற்றமாகும். எனினும், உணவு விநியோக செயலி பெயர் மாறாது, ஜொமாட்டோ என்ற பெயரிலேயே செயல்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu