ஜோமாட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் துணை நிறுவனர் மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக 2 வாரங்களில், நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் மூவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக, ஜோமாட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில், உயர்மட்ட அதிகாரி ராகுல் கஞ்சூ தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, மோஹித் குப்தாவின் ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது. தொடர் இழப்பில் இருந்த ஜோமாட்டோ நிறுவனம், மீண்டு எழுந்து வரும் சமயத்தில், பல மூத்த அதிகாரிகள் இவ்வாறு பதவி விலகுவது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.