ஜொமாட்டோ இணை நிறுவனர் குஞ்சன் படிதார் ராஜினாமா

January 3, 2023

ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான குஞ்சன் படிதார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நான்காவது இணை நிறுவனராக குஞ்சன் படிதார் உள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மூன்றாவது நபராக ஜொமாட்டோ நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ராஜினாமா தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், ஜொமாட்டோ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப அதிகாரிக்கான தேடலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அண்மையில், பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட நிறுவனத்தின் […]

ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான குஞ்சன் படிதார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜொமாட்டோ நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நான்காவது இணை நிறுவனராக குஞ்சன் படிதார் உள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மூன்றாவது நபராக ஜொமாட்டோ நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ராஜினாமா தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், ஜொமாட்டோ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப அதிகாரிக்கான தேடலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில், பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட நிறுவனத்தின் அறிக்கையில் இவரது ராஜினாமா செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்திற்கு இவர் தன்னிகரில்லா பங்களிப்பு அளித்துள்ளதாகவும், அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu