225 சிறிய நகரங்கள் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் ஜொமாட்டோ

February 11, 2023

உணவு விநியோக வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜொமாட்டோ, இந்தியாவின் 225 சிறிய நகரங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல், "ஜனவரி மாதம் முதல், நாங்கள் 225 சிறிய நகர வர்த்தகத்தில் இருந்து வெளியேறியுள்ளோம். கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், குறிப்பிட்ட இந்த 225 நகரங்களில் இருந்து 0.3% மட்டுமே […]

உணவு விநியோக வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜொமாட்டோ, இந்தியாவின் 225 சிறிய நகரங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல், "ஜனவரி மாதம் முதல், நாங்கள் 225 சிறிய நகர வர்த்தகத்தில் இருந்து வெளியேறியுள்ளோம். கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், குறிப்பிட்ட இந்த 225 நகரங்களில் இருந்து 0.3% மட்டுமே ஆர்டர்கள் கிடைத்துள்ளன. மேலும், கடந்த சில காலாண்டுகளாக, இந்த நகரங்களில் இருந்து சிறப்பான வர்த்தகச் செயல்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை" என்று கூறினார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் ஜொமாட்டோ நிறுவனம் வர்த்தகம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu