ஜொமாட்டோ நிறுவனம், ஜிஎஸ்டி கவுன்சில் இடம் இருந்து ஷோ காஸ் நோட்டீஸ் பெற்றுள்ளது. அதில், ஜொமாட்டோ நிறுவனம், 401.7 கோடி ரூபாய் மதிப்பில் ஜிஎஸ்டி வரி செலுத்தாததற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 29, 2019 முதல், மார்ச் 31, 2022 வரையிலான காலகட்டத்திற்கு இந்த வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் அனுப்பியுள்ள இந்த நோட்டீஸுக்கு ஜொமாட்டோ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிறுவனம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே டெலிவரி கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு வரி செலுத்த தேவையில்லை எனவும் கூறுகிறது. மேலும்,இது வரி ஏய்ப்பு ஆகாது எனவும் கூறுகிறது. எனினும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு முறையான விளக்கத்தை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளது.