ஜொமாட்டோவில் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய உணவகங்களுக்கு அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, தினசரி முறையில் அவர்களுக்கான சம்பளத் தொகை வழங்கப்படுகிறது.
ஜொமாட்டோ தளத்தில் வர்த்தகம் செய்யும் உணவகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கான தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை தினசரி அடிப்படையில் குறைத்து ஜொமாட்டோ அறிவித்துள்ளது. புதிதாக இணையும் சிறிய உணவகங்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த திட்டத்தை ஜொமாட்டோ அறிவித்துள்ளது. மேலும், மாதத்திற்கு 100 ஆர்டர்கள் கடந்த பிறகு, தினசரி முறைக்கு உணவகங்கள் மாறிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஜொமாட்டோ ரெஸ்டாரன்ட் பார்ட்னர் செயலியில், எந்தவித கட்டணமும் இன்றி இந்த மாற்றத்தை உணவகங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, முந்தைய 3 நாட்களில் கிடைத்த வருவாய் அடிப்படையில் சம்பளத் தொகை வழங்கப்படும்.