ஜொமாட்டோ நிறுவனம் பெரிய ஆர்டர்களுக்கான பிரத்தியேக சேவையை இந்தியாவில் முதல் முறையாக தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் வெளியிட்டுள்ளார்.
சுமார் 50 பேருக்கு தேவையான உணவு ஆர்டரை பூர்த்தி செய்யும் வகையில் ஜொமாட்டோ நிறுவனம் பிரத்தியேக சேவையை அறிமுகம் செய்துள்ளது. சிறிய விழாக்களுக்கு இது பொருந்தும். லார்ஜ் ஆர்டர் பிளீட் என்று இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மின்சார வாகனங்களின் மூலம் இந்த ஆர்டர்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. ஏற்கனவே, இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், கூடுதல் அம்சங்களாக ஹாட் பாக்ஸ், கூலிங் கம்பார்ட்மெண்ட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.














